என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளி"
- வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு:
பீகார் மாநிலம் நானேய்யா கிழக்கு பாகாட்டியா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பஸ்வான் (22). இவர் காஞ்சிக்கோயில் அருகே உள்ள எருக்காட்டு வலசு பகுதியில் உள்ள மஞ்சள் தூள் தயாரிக்கும் மில்லில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இரவு அவரது மனைவியுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். பின்னர் ஊருக்கு செல்வதாக கூறி சென்றவர் மில்லின் மதில் சுவர் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிக்கோவில் போலீசார் ரமேஷ் பஸ்வானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- மதுபோதையில் இருந்த ராஜேசிடம் சம்பளம் பாக்கி கேட்டு தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
- தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான ராஜேஷ்(வயது30) என்பவர் சம்பளம் பேசி அழைத்து வந்திருந்ததாக தெரிகிறது. அவர் மொத்தமாக சம்பளத்தை வாங்கி மற்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சிலருக்கு ரூ.20 ஆயிரம்வரை சம்பள பணத்தை ராஜேஷ் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் மதுபோதையில் இருந்த ராஜேசிடம் சம்பளம் பாக்கி கேட்டு தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெள்ளவேடு போலீசார் சம்பவ இடதுக்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாள நிஷாத் (20) சச்சின் ( 20 ) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.
- மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.
பவானி:
மேற்கு வங்க மாநிலம் பகரா பகுதியை சேர்ந்தவர் நியூர்லிகாஜு. இவரது மகன் மன்னன் காஜு (35). இவருக்கு சம்பா பிபி என்ற மனைவியும், ஹசன் காஜு என்ற மகனும் உள்ளனர்.
இவர் திருப்பூர் முதலி பாளையம் சிட்கோ மீனாட்சி நகரில் தங்கி மேற்கு வங்கத்தை சேர்ந்த சலா வுதீன் மற்றும் திருப்பூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மோகன்ராஜ் என்பவரிடம் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.
இவரின் மனைவி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் மன்னன் காஜு மற்றும் அவர்களது நண்பர்களான சையது, இன்தாஜில் ஆகிய 3 பேர் சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
அவர்கள் சித்தோடு அருகே சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் ஒரு தனியார் ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.
இதை கண்ட அவருடன் சென்றவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு டீக்கடையில் தண்ணீர், டீ, பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனியாா் எண்ணெய் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா்.
- பருப்பு உலர வைக்கும் கலனில் சிக்கி அவா் காயமடைந்தாா்.
காங்கயம் :
மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் பப்லு பிரமானிக் (வயது 21). இவா் காங்கயம் அருகே, சத்திரவலசு பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக பருப்பு உலர வைக்கும் கலனில் சிக்கி அவா் காயமடைந்தாா்.இதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- கோழிப்பண்ணையில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தார்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுவராஜ்(வயது 18). இவர் பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கோழி பண்ணையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சுவராஜ் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
- வட மாநிலப் பெண் ஒருவர் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.
பல்லடம் ூ
மேற்கு வங்க மாநில த்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல்(வயது35). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையி ல்லாமல் கஷ்டப்படு வதாகவும் , தற்போது மிகவும்சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச்சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே ஷாஜி மண்டல் சென்றுள்ளார்.
அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் கொண்டு சென்று அங்கு உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அவரை அடித்து மிரட்டி ரூ. 10லட்சம் பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறி ஷாஜி மண்டல் அழுதுள்ளார். மீண்டும் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள் அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம், மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொ ண்டனர்.
பின்னர் திருப்பூரில் உள்ள ஏடிஎம். மையத்தில் ஷாஜி மண்டலின் ஏடிஎம். கார்டை பயன்படுத்தி ரூ. 56 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு, சீக்கிரமாக பணத்தை ரெடி செய், இது குறித்து புகார் செய்ய போலீசுக்கு போனால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரது மனைவி சுகுலா சர்தார்(35) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமை க்கப்பட்டு, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நெல்லையை சேர்ந்த ஜெயகுமார் மகன் பாலசுப்பிரமணியன் (18), நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மோகன் மகன் கிளிண்டன் (23) ஆகிய 2பேர் மதுரை மாவட்டம் திருப்புவனம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடை ந்தனர். அவர்களை நீதிபதி காவலில் வைக்க உத்தர விட்டார். இதையடுத்து 2பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய மேலும் 2பேரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இதுவரை 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க கணவன்- மனைவி இருவரும் வந்துள்ளனர்.
- கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
பல்லடம் :
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் விஸ்வகர்மா(வயது 50). இவர் கோடங்கி பாளையம் கல்குவாரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க கணவன்- மனைவி இருவரும் வந்துள்ளனர். பின்னர் மனைவியை பஸ்சில் அனுப்பி வைத்துவிட்டு, வேறொரு தொழிலாளியுடன் மோட்டார் சைக்கிளில் லட்சுமி மில் பகுதியில் இருந்து கோடங்கிபாளையம் நோக்கி சென்றார்.
ஆறாகுளம் பிரிவு அருகே உள்ள பேக்கரியில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அங்கு டீ குடித்துவிட்டு தீபக் விஸ்வகர்மா மட்டும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த தீபக் விஸ்வகர்மா உயிரிழந்தார்.
- கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் கேட்டுள்ளனர்.
- சட்டை பையில் இருந்த 200 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள குன்னாங்கல் பாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அப்துல் கசாம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சின்னக்கரையில் உள்ள பள்ளிவாசல் அருகே இரவு நடந்து வந்துள்ளார்.அப்போது அவரை வழி மறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் கேட்டுள்ளனர்.செல்போனை அறையில் வைத்து விட்டு வந்ததாகவும்,பணம் இல்லை எனவும் அப்துல் கசாம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அப்துல் கசாமை தாக்கி அவரது சட்டை பையில் இருந்த 200 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் அப்துல் கசாம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய வால்பாறையை சேர்ந்த ராம் பிரகாஷ்(22),ஆகாஷ்(18),திருநெல்வேலியை சேர்ந்த பேச்சியப்பன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த பல்லடம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பல்லடத்தில் ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
- பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அமிட் கஞ்சு (வயது 23). இவர் பல்லடத்தில் ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் பல்லடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து டீ குடிப்பதற்காக வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மயங்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி அமிட் கஞ்சு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடமாநில தொழிலாளி உள்பட 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள சித்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). இவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு ராமுத் தாய் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முத்துக்குமார் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று முத்துக்குமார் மது குடித்து விட்டு தகராறு செய்வதை மனைவி கண்டித்ததால் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் முத்துக்குமார் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முத்துராமன் கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள சங்கர்செவல் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (34). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் விரக்தியடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தூக்குப்போட்டு ராமர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், நாரிபாரி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (19). இவரும், இவரது சகோதரர் அசோக் குமாரும் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வந்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் ராகுல் சொந்த ஊர் சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அவர் விரக்தியடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து சகோதரர் அசோக் குமார் கொடுத்தபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி பிச்சாண்டி தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (26). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து இவரது தாய் தங்கமாரி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிங்கம்புணரி அருகே வடமாநில தொழிலாளி மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார்.
- எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பிரதான லைனில் இரும்பு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இரும்பு குழாய்களை இணைக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை இதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தது. 12 மீட்டர் நீளம் கொண்ட இரும்பு பைப்பின் உள்ளே சென்று அதனை இணைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த தேபாப்ரட்டா ஹால்டர் (வயது 31) என்ற தொழிலாளிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த எஸ் வி மங்கலம் போலீசார் இறந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழர்களை விட, வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
- வட மாநில தொழிலாளர்கள் கூட்டமாக, தமிழக வாலிபர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
தமிழர்களை விட, வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம் செல்லும் சாலையில் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக வாலிபர் ஒருவரை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வட மாநில தொழிலாளர்கள் கூட்டமாக, தமிழக வாலிபர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பேக்கரியில், சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தபோது, வடமாநில தொழிலாளி ஒருவருக்கும், தமிழகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடமாநில தொழிலாளர், தன்னுடன் வேலை செய்யும் சக வட மாநிலத்தவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தாக்க வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மோதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் யாரென்றும் விசாரணை நடத்தப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்